முன்னணி தமிழ்ப் படங்களை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்…

முன்னணி தமிழ்ப் படங்களை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்…

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் உலகம் முழுவதும் கோலோச்சும் ஒரு ஓடிடி நிறுவனமாக உள்ளது. தொடக்கக் காலத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் சுயாதீன திரைப்படங்களை வாங்கி வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் பின்னர் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தங்கள் புதுப்பட பட்டியலை சமீபத்தில் அறிவித்துள்ளது. அதில் அஜித்தின் விடாமுயற்சி, விக்ரம்மின் தங்கலான், கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் SK 21, விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகராஜா, ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல், கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி ஆகிய படங்கள் ஆகிய தமிழ் படங்களைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.