ரஷ்யாவை தொடர்ந்து இந்த PUPலும் தாக்குதல் நடக்கப் போகிறது ? உஷாரான பொலிஸ் !

ரஷ்யா

ரஷ்யாவில் ஒரு வாரத்திற்கு முன்னர், இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய செய்தி யாவரும் அறிந்ததே. இன் நிலையில் இன்று சற்று முன்னர் அதேபோன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிசார் ஒரு மது விடுதியை சுற்றிவளைத்துள்ளார்கள். காரணம் அங்கே முகமூடியோடு வந்த நபர் ஒருவர், தன்னிடம் வெடிகுண்டு ஒன்று உள்ளதாகவும், மது விடுதி(பப்) தகர்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அங்கே வேலைபார்க்கும் நபர் ஒருவர் பொலிசாருக்கு அவசர அழைப்பை விடுக்க. பொலிசாரின் ஆயுதம் தாக்கிய பிரிவு உடனே பப்பை சுற்றிவளைத்தார்கள். ஆனால் எல்லாமே ஒரு செக்கனில் புஸ் என்று ஆகிவிட்டது. குறித்த நபர் படு போதையில் இருந்துள்ளதோடு அவரிடம் எந்த ஒரு வெடி குண்டும் இருக்கவில்லை. பொலிசார் வந்தவேளை எதுவும் பேசமால் கைகளை உயர்த்தியபடி சாட்சாங்கமாக சரணடைந்துவிட்டார் அந்த ஆசாமி.

நெதர்லாந்தில் சற்று முன்னர் நடந்த சம்பவம் தான் இது. இருந்தாலும் சில நிமிடங்களில் எல்லாம் இந்தச் செய்தி சர்வதேச அளவில் பரவிவிட்டது.

ரஷ்யா