Wednesday, July 18 2018

LYAC TV

அணு ஆயுதங்களை தடை செய்யும் உலக நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணைகிறது..

May 16, 2018    2005

ஜெனிவா நகரில் போர் ஆயுதங்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் வடகொரியா நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதர் ஹான் டாய் சாங் பங்கேற்று பேசினார்.

'அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்களின் சோதனைகளை கைவிடுவதும் இதன் தொடர்ச்சியாக தயாரிப்புகளை நிறுத்துவதும் உலகளாவிய அளவில் போர் ஆயுதங்களை ஒழிப்பதில் முக்கிய பங்களிப்பாகும். அவ்வகையில், முற்றிலுமாக அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் சர்வதேச நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணையும்' என அவர் குறிப்பிட்டார்.

 


Loading...