Wednesday, July 18 2018

LYAC TV

குமுதினி படுகொலை நினைவுத்தூபிக்கு மலர் தூபி அகவணக்கம்!

May 16, 2018    1015

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை நினைவுத் தூபிக்கு ஆழ்ந்த அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த அகவணக்க நிகழ்வில், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூபி அகவணக்கம் செலுத்தினர்.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது.

படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை ஸ்ரீ லங்கா கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்தது.

இந்த துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை நினைவுகூரும் முகமாக நெடுந்தீவு துறைமுக பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

 


Loading...