Wednesday, July 18 2018

LYAC TV

ரஷ்ய நபருக்கு நஞ்சு கொடுத்த தம்பதிகள்: பொலிசார் அக்குவேர் ஆணிவேராக பிரித்து ஆராட்சி..

Mar 14, 2018    27320

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் செயில்ஸ்பெரி நகரில் வைத்து முன் நாள் ரஷ்ய உளவாளி ஒருவர் நஞ்சூட்டப்பட்டார் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள். இவர் இருக்கும் இடத்திற்கு கில்லிங்ஹாம் என்னும் இடத்தில் இருந்து(30KM) 2 பேர் சென்றுள்ளார்கள். இவர்கள் தம்பதிகள் போல காட்சி அளிப்பதோடு. ரஷ்ய உளவாளி நஞ்சூட்டப்பட்ட வேளை ஏதோ ஒருவரை ஒருவர் முத்தம் கொடுப்பது போல பாசாங்கு செய்துள்ளார்கள்.

இவை அனைத்தும் CCTV கமராவில் பதிவாகியுள்ளது. குறித்த தம்பதிகள், செயில்ஸ்பெரி நகரில் வசிப்பவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பிரித்தானியர்களே அல்ல. அவர்கள் 30 மைல்களுக்கு அப்பால் உள்ள, கில்லிங்ஹாம் என்னும் நகரில் இருந்து அன்றைய தினம் செயில்ஸ்பெரிக்கு வந்துள்ளார்கள் என்பதனை பொலிசார் கண்டறிந்துள்ளார்கள்.

சுமார் 30 மைல் தொலைவில் உள்ள அன் நகரில் இருந்து அங்குலம் அங்குலமாக தேடி, வழியில் உள்ள அனைத்து CCTV கமரா பதிவுகளையும் அவர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஷ்ய உளவாளிக்கு நச்சு வாயுவை பிரயோகித்த இந்த தம்பதியினர், பிரிட்டனில் தான் எங்கே மறைந்திருக்கவேண்டும். எனவே கில்லிங்ஹாம் நகரில் இருந்து வெளியேறும் அனைத்து பாதைகளிலும் உள்ள CCTV கமரா பதிவுகளை பொலிசார் பார்த்து வருகிறார்கள். பிரித்தானியாவில் தற்போது பொலிசாரின் பெரும் பகுதியினர் இந்த வழக்கு தொடர்பாக களத்தில் இறங்கியுள்ளார்கள்.

அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேயும் பொலிசார் , எப்படி என்றாலும் குறித்த தம்பதியினரை நெருங்கி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுபோக , பிரித்தானியாவில் வசிக்கும் பல நூறு முக்கிய ரஷ்யர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அனைத்தும் ஒட்டுக் கேட்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்ததில் ஓசை கேட்காத நிழல் யுத்தம் ஒன்றை பிரித்தானியா ரஷ்யாவுக்கு எதிராக ஆரம்பித்துள்ளது. தனது பலம் என்ன என்பதனை அது நீரூபிக்காமல் போகாது...

 


Loading...