Sunday, June 24 2018

LYAC TV

நெதர்லாந்து பிரதமர் காபியை கீழே கொட்டி அதனை துடப்பத்தால் துடைக்கும் காட்சி

Jun 06, 2018    8445

இதனை தான் வெளிநாடு என்று சொல்வார்கள். நெதர்லாந்தின் பிரதமர் அலுவலகம் செல்லும் போது குடிக்க கையில் காபியை எடுத்துச் சென்றார். அவர் கதவை திறக்க முற்பட்டவேளை அதனை கீழே கொட்டிவிட்டார். உடனே யாரை பாராமல் அங்கே நின்ற பணிப் பெண்ணின் துடப்பத்தை வாங்கி தானே நிலத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இதுவே இந்தியா அல்லது இலங்கை போன்ற நாடுகளில் என்றால். அதனை துடைக்க 100 பேர் ஓடிவருவார்கள். பிரதமர் அப்படியே சென்றுவிடுவார். அது தவறு இல்லை.

ஆனால் ஐரோப்பிய நாடுகளில் தான் ஒரு தவறைச் செய்தால், அதனை அவர்களே திருத்திக் கொள்கிறார்கள். அது பிரதமர் என்றாலும் சரி அன் நாட்டு ராணியாக இருந்தாலும் சரி.