Sunday, June 24 2018

LYAC TV

600 வருடங்களுக்கு முன் 56 சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட சம்பவம் தோண்டப்படும் விடையம்

Jun 09, 2018    6140

பெரு நாட்டில் இன்றும் கூட மனிதர்களோடு தொடர்புகள் அற்ற நிலையில், ஆதி வாசிகள் வசித்து வருகிறார்கள். இது உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில். அன் நாட்டில் உள்ள சில பழங்குடியினர், சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் கடவுளுக்காக 56 சிறுவர்களை பலி கொடுத்துள்ள விடையம் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிமு என்னும் இனத்தவர்களே இவ்வாறு 56 சிறுவர்களை கடவுளுக்கு பலி கொடுத்துள்ளார்கள். இந்த இடத்தை தொல்பொருள் ஆராட்சியாளர்கள் தற்போது கண்டு பிடித்து. அங்கே புதைக்கப்பட்ட அனைத்து சிறுவர்களது உடல்களையும் மீட்டு ஆராய்ந்து வருகிறார்கள். 600 வருடங்கள் ஆகியும். அவர்கள் அணிந்திருந்த உடைகள் அழிந்து போகாத நிலையில் உள்ளது.