Sunday, June 24 2018

LYAC TV

விஜய் மீது கால் வைத்த கீர்த்தி, கடுப்பாகும் ரசிகர்கள்..

Jun 12, 2018    5200

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

thalapathy

இந்நிலையில் தற்போது தளபதி-62 ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் தரையில் அமர்ந்திருக்க கீர்த்தி சுரேஷ் ஷோபாவில் அமர்ந்து கொண்டு விஜயின் கால் மீது காலை வைத்து கொண்டிருக்கிறார்.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் ஏன் உங்க கால் தரையில இருக்காதா? எங்க தளபதி மேல தான் வைக்கணுமா? என செல்லமாக கோபப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இந்த புகைப்படத்தை வைத்து மீம்ஸ் தயார் செய்தும் வெளியிட்டு வருகின்றனர்.