Wednesday, July 18 2018

LYAC TV

மஹிந்த ஆட்சியில் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தது; பசில் ஒப்புதல் வாக்குமூலம்..

Jun 17, 2018    1130

ஸ்ரீலங்காவின்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பைஉறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கும் போது மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்ததாக மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மஹிந்தவின் சகோதரர்களில்ஒருவரான பெஷில் ராஜபக்ச பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தின் அக்குரணபகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதைஇலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்காக நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள்அமைச்சர் பெஷில் ராஜபக்ச இந்தத் தகலைத் தெரிவித்திருக்கின்றார்.

தகவல்களை அறிந்துகொள்ள இருக்கும்சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரம் என்ற விடையங்களில் இருந்து எவரும் விலகியிருக்க முடியாது என்றுதெரிவித்த பெஷில் ராஜபக்ச, தமது ஆட்சிக்காலத்தில்அப்போதிருந்த சூழ்நிலைகள் காரணமாக இந்த அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருந்ததாகபகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

குறிப்பாக அன்று தமது அரசாங்கம் உலகிலுள்ளமிகவும் மோசமான பயங்கரவாத அமைப்புடன் போரில் ஈடுபட்டிருந்தாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மால் குறைபாடுகள்தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் வரையரைகளை தாண்டிசென்ற சம்பவங்களும் நிகழ்ந்திருந்தன என்றும் ஏற்றுக்கொண்டார்

அவற்றுக்கு உதாரணமாக குடிநீருக்காக வீதியில்இறங்கி போரடிய. கம்பஹா மாவட்டத்தின் ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டுதுதுப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஒடுக்கிய சம்பவத்தை பெஷில் நினைவுகூர்ந்தார..

அதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தகவலையத்தில் இடம்பெற்ற தொழிலாளர்களின் போராட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்நடத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட சம்பவத்தையும் பெஷில் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் சிலாபம் போராட்டத்தின் போது மீனவர்ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்த அவர், இவ்வாறான சம்பவங்கள் எதிர்கால ஆட்சியில் இடம்பெறஇடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இவை குறித்து மிகத் தெளிவாக முடிவுகளைஎடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்ட பெஷில் ராஜபக்ச, அன்று நிகழ்ந்த சம்பவங்களைப் பார்க்கும் போது அவை தமதுஆட்சியை கவிழ்ப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டங்களா என்றசந்தேகமும் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கத்தில் அரச அதிகாரிகளைமரத்தில்கட்டி அடித்த அமைச்சர்களும்இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், ஆனால் அவர்கள் இன்று கடந்தஆட்சியில் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், அடக்குமுறைகள்இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 


Loading...