Wednesday, July 18 2018

LYAC TV

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

Jun 19, 2018    235

ஜப்பானில் மேற்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

டோக்கியோ:

ஜப்பானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் இல்லை.


இரண்டாம் இணைப்பு..


ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு மூன்று பேர் பலி - பலர் காயம்

டோக்கியோ:

ஜப்பானின் ஒசாகா, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வீடுகள் குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.



மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது. ரெயில் சேவைகள் தடைப்பட்டன. தொழிற்சாலை பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பலர் நகரும் படிக்கட்டுகளில் சிக்கிக்கொண்டனர். சாலைகளின் கீழே செல்லும் தண்ணீர் குழாய்கள் உடைந்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அருகில் உள்ள அணுமின் நிலையங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

 


Loading...