Wednesday, July 18 2018

LYAC TV

ஹை ஹீல்ஸ் செருப்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..

Jun 30, 2018    7690

மெக்சிகோவில் "ஹை ஹீல்ஸ்" போட்டுக் கொண்டு சாலையை கடக்க முயன்ற பெண் தவறி விழுந்து காரில் அடிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மெக்சிகோவில் உள்ள சோனாரா மாகாணம் நோகாலஸ் நகரில் மினர்வா என்ற பெண், வாகனங்கள் அதிகம் செல்லும் 3 வழிச்சாலையை ஒன்றை கடக்க முயற்சித்தார். அப்போது பதற்றத்தோடு பாதிசாலையை கடந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவர் சாலையில் சறுக்கி விழுந்தார்.

அப்போது சாலையில் வேகமாக வந்த கார் மினர்வாவை இழுத்துக் கொண்டு சென்று நின்றது. காருக்கு அடியில் சிக்கிய மினர்வாவை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.



 


Loading...