Monday, December 10 2018

LYAC TV

முதலக்கண்ணீருடன் மெரினாவில் புலம்பிய இபிஎஸ், ஓபிஎஸ்.!

Dec 06, 2018    640

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் அமைதி பேரணி சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் நின்று அதிமுகவை அழிக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து காக்கவும் உறுதியேற்றுக்கொண்டனர்.

முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, அதிமுக என்ற அரசியல் கட்சியை கபளீகரம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அரசியல் நோக்கர்களால் முன் வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

 

Loading...