Monday, December 10 2018

LYAC TV

ஜெயா மறைந்த பிறகு எங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது - அ.தி.மு.க அமைச்சர்.!

Dec 06, 2018    375

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்சியினருடன் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அமைச்சர்களுக்கு ஓர் சுதந்திர வெளி கிடைத்துள்ளது. அதன் காரணமாகவே அவர்கள் ஊடகங்களிடம் பேசுகையில் சில தவறுகள் நேர்ந்தது. காலப்போக்கில் அது சரியாகுமென நினைக்கிறன். முன்பெல்லாம் ஜெயலலிதா அவர்களின் அனுமதியின்றி அமைச்சர்கள் எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது. தற்போது அப்படியல்ல" என தெரிவித்துள்ளார்.

மேலும், "இப்போது 33 அமைச்சர்களும் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். அந்த சுதந்திரம் முன்பு இல்லை. அந்த சுதந்திரம் புதிதாக வரும்போது சில விஷயங்கள் தவறாவதை பொருட்படுத்தக்கூடாது. அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுவிடக் கூடாது" எனவும் தெரிவித்துள்ளார்.

 

Loading...