
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் நடித்துப் பிரபலமாக இருப்பவர் நடிகை சன்னி லியோன். சில ஆபாச படங்களில் நடித்துப் பல சர்ச்சைகளில் சிக்கினார். 2004 ல் “தி கேர்ள் நெக்ட் டோர்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 2008 ல் “பைரைட்ஸ் பிளட்ஸ்” என்ற ஆங்கில படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
2010 ல் தி வெர்ஜினிட்டி ஹிட், ஜிசம், சூட்டவுட் வித் வடல, ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்2, போன்ற பல படங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடித்திருந்தார். 2014 ல் “வடகறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடித்தார்.
2011 ல் தொழிலதிபர் “டேனியல் வெபருடன்” சன்னி லியோன் திருமணம் செய்து கொண்டார். தற்போது தொழிலதிபராக இருக்கும் சன்னி லியோன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு “ஒ மைக்கோஸ்ட்” என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேத்துகிறார்.





