அடுத்து அமீரையும் கொலை பண்ண போறயா? கலங்கி அழுத பாவினி!

அடுத்து அமீரையும் கொலை பண்ண போறயா? கலங்கி அழுத பாவினி!

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தவரும் நடிகை பாவினி முதன் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சீரியல்களின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். குறிப்பாக தெலுங்கு சீரியல் நடித்து அங்கு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. தமிழ் திரைப்படமான துணிவு படத்தில் அஜித்குமாருக்கு எதிராக துணைவேட்டில் நடித்திருந்தார். பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் கலந்து கொண்டார். போட்டியாளராக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார். இவரது அழகும் இவரது தோற்றமும் இவரது பவ்யமான குணமும் எல்லோருக்கும் பிடித்து விட்டது.

குறிப்பாக அதை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அமீர் அவர்களை காதலித்து வந்தார். இவர்கள் நிகழ்ச்சியில் உள்ளே இருக்கும்போதே காதலிக்க துவங்கினர். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் தங்களது காதலை தொடர ஆரம்பித்தனர். இது உண்மையான காதல் என மக்கள் அதுக்கப்புறம் பேச ஆரம்பித்தனர். ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது பேட்டிகளிலும் பேட்டிகளிலும் தங்கள் பங்கேற்று இருவரும் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர்.

பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். எப்போதும் திருமணம்? என பலரும் அவர்களிடம் கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான விடையும் கொடுத்துள்ளார்கள். ஆம் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜோடியாக கலந்துக்கொண்டபோது போது தங்களது திருமண தேதியை கூறினார்கள்.

அதாவது இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கும் என அமீர் – பாவினி ஜோடி அறிவித்துள்ளனர். இவர்களின் திருமண செய்தியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற ரசிகர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திருமணம் பற்றி அறிவித்த கையோடு பாவனி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகமான அன்பை கொடுப்பேன். என்னைப் பற்றி யோசிப்பதை விட அவர்களுக்காக யோசித்து நிறைய விஷயங்கள் செய்வேன். எனது முன்னாள் கணவரை நான் தான் அவரை கொலை செய்தேன் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள்.

அதற்கு விளக்கம் கொடுக்க நினைத்தது இல்லை, காரணம் அது கடந்துசென்று விடும் என்று எனக்கு தெரியும். இப்போது நான் அமீருடன் இருக்கும் பொழுது கூட அடுத்ததாக அமீரை கொலை பண்ண போகிறீர்களா என்று கேட்கிறார்கள். எனது முன்னாள் கணவரும் நானும் எத்தனை வருடங்கள் காதலித்தோம், எந்த மாதிரி அன்பை வெளிப்படுத்திக்கொண்டோம் என யாருக்கும் தெரியாது.

இதுபோன்ற விஷயங்களை நான் பேசும்போது எனக்கு அழுகை வந்துவிடும், பொது வெளியில் நான் அழாமல் இருக்கலாம், ஆனால் தனியாக சென்று அழுதுவிட்டு தான் வருவேன் என எமோஷ்னலாக மிகவும் பேசியுள்ளார் பாவினி.