உச்சக்கட்ட ரொமான்ஸ்… ஸ்ருதி ஹாசன் – லோகேஷ் ‘இனிமேல்’ முழு பாடல் ரிலீஸ்!

உச்சக்கட்ட ரொமான்ஸ்… ஸ்ருதி ஹாசன் – லோகேஷ் ‘இனிமேல்’ முழு பாடல் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த மாநகரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே அவருக்கு பெயரும் புகழும் தேடித்தர தொடர்ந்து அடுத்த திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்தார். மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி இருந்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து லோகேஷின் புகழ் ஊரெங்கும் ஓங்கி ஒலித்தது. தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவுக்கு ஹிட் அடித்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த மாபெரும் வெற்றிக்கு பின்னர் மீண்டும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜை அழைத்து வாய்ப்பு கொடுக்க, மீண்டும் அந்த வெற்றி கூட்டணி இணைந்து லியோ படம் வெளியானது. அந்த படமும் லோகேஷின் கெரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார். கமல் ஹாசன் தயாரிப்பில் “இனிமேல்”என்ற மியூசிக் ஆல்பம் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் லோகேஷ் ஸ்ருதி ஹாசனுடன் எல்லை மீறி ரொமான்ஸ் செய்து புகுந்து விளையாடிவிட்டார். இயக்குனராக இருந்து நடிகராக இப்படி முரட்டுத்தனமாக ரொமான்ஸ் செய்துள்ள லோகேஷ் கனகராஜை எல்லோரும் வச்சி செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ: