லண்டனில் விழுந்து கிடக்கும் மூதாட்டி: சாகப் போகிறீர்கள் என்றால் மட்டுமே 999 போன் அடியுங்கள்

Spread the love

பிரித்தானியாவில் ஏற்கனவே பல தாதிமார்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில். நாளை(21) மேலும் 10,000 தாதிமார்கள் மற்றும் 999 அம்பூலன்ஸ் ஓட்டுனர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் சாகும் நிலையில் இருந்தால் மட்டுமே 999 அவசர சேவைப் பிரிவுக்கு அழைக்க முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. இது போக எலிசபெத் என்னும் 93 வயது மூதாட்டி இடுப்பு எலும்பு முறிவடைந்து 25 மணி நேரமாக் நிலத்தில் படுத்த படுக்கையாக உள்ளார்… ஆனால்

அவரை ஏற்றிச் செல்ல அம்பூலன்ஸ் எதுவும் வரவில்லை. காரணம் இந்த வேலை நிறுத்தம் தான். பிரித்தானியாவில் மிக அதிகமாக சம்பளம் பெறும் நபர்களில் தாதிமார்களும் அம்பூலன்ஸ் ஓட்டுனர்களும் அடங்குகிறார்கள். ஆனால் அதற்கு மேல் சம்பளத்தை அதிகரிக்குமாறு இவர்கள் கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடு உள்ள நிலையில் தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ரிஷி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில். இவர்கள் கொஞ்சம் கூட மனச் சாட்சி இல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால்..

எத்தனை உயிர் போகப் போகிறதோ தெரியவில்லை ? பிரித்தானியாவில் இன்று முதல் அவசர அழைப்பை மேற்கொண்டால் அம்பூலன்ஸ் வண்டி வருமா இல்லை வராதா என்று தெரியவில்லை. எனவே தமிழர்களே ஜாக்கிரதை. அவசரம் என்றால் நீங்களே வைத்தியசாலை செல்வது நல்லது. அம்பூலன்ஸ்சுக்கு அடித்தால் அது நேரத்திற்கு வரப்போவது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.