மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு அரசுத் தீர்வு காணும் என மக்கள் நினைக்க வேண்டாம்… பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்!!!

இந்த செய்தியை பகிர

பிரிட்டனில் தற்போது அதிகரித்த பணவீக்கம் காரணமாக என்றுமில்லாதவாறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசிகள் உயர்வடைந்துள்ளதுடன், பிரிட்டன் நாணயத்தின் பெறுமதியானது மதிப்பிழந்துள்ளது அதேநேரம் வேலையின்மை வீதமானது அதிகரித்துக் காணப்படுவதாகப் பிரிட்டன் மத்திய வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களுக்கு அரசு தீர்வினைப் பெற்றுத்தரும் என நினைக்க வேண்டாமெனத் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட மக்கள் பொங்கி எழுந்துள்ளதுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்களை முன்னெடுத்துள்ளனர்.

பிரிட்டனின் அரச ஊழியர்கள், குறிப்பாகச் சுகாதாரத் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பிரதமரின் அலுவலக வாயிலில் கோரிக்கைகள் முழங்க ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அரச தரப்பிலிருந்து எந்தவிதமான பதில்களும் இதுவரையில் கிடைக்கவில்லை, இந்நிலையில் பிரிட்டனில் உள்ள 150 பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 70 ஆயிரம் ஊழியர்கள் 18 நாட்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர