தளபதி விஜய் மீது பொலிஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது எல்லாம் ஒரு குற்றமா ?

தளபதி விஜய் மீது பொலிஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது எல்லாம் ஒரு குற்றமா ?

நடிகர் தளபதி விஜய், ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்து வரும் ‘GOAT’ (Greatest Of All Time) படத்தின் ஷூட்டிங்கில் இருந்து இடைவெளி எடுத்து, லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்னை திரும்பினார். நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த போது, அவரது வருகை பெரும் கூட்டத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்த்தது.

அவரது ரசிகர்கள் அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூடியதால், வாக்குச்சாவடியில் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 200க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வந்ததன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர் ஒருவர் தளபதி விஜய் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

வாக்குப்பதிவு நாளில் பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியதற்காக நடிகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  பொலிசாரும் உடனே இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட என்னப்பா ஜனநாயக கடமையைச் செய்தால் இப்படி ஒரு வழக்கை போடுவதா ? அப்படிப் பார்த்தால் தல அஜித் மீதும் வழக்கு போட வேண்டி இருக்குமே ?