பச்சை நிற சேலையில் ஜொலிக்கும் பொன்னியன் செல்வன் “பூங்குழலி”…

Spread the love
ஐஸ்வர்ய லட்சுமி

நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்!….

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. 2017 ல் “நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்ய லட்சுமி “ஆக்ஷன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து 2021 ல் தனுஷுடன் இணைந்து “ஜகமே தந்திரம்” திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இப்படத்திற்கான சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பொன்னியன் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன் பின் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் 2 படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கான புரமோஷன்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து வருகிறார்.