நடிப்பில் இருந்து பிரபாஸ் ஒரு மாதத்திற்கு ஓய்வு !

நடிப்பில் இருந்து பிரபாஸ் ஒரு மாதத்திற்கு ஓய்வு !

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில், ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் பாகுபலி முதல் பாகம் மற்றும் 2 வது பாகம்.

இப்படங்கள் மிகப்பெரிய வசூல் வாரிக் குவித்தது. இதனால் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக அறியப்படுகிறார்.

இப்படத்திற்குப் பின் அவர் நடித்த ஆதிபுரூஸ், ராதே ஸ்யாம் உள்ளிட்ட படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில், சமீபத்தில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான சலார் பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில், உடல் நலனை கருத்தில் கொண்டு ஒரு மாதத்திற்கு அவர் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது அவர் கல்கி என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து அவர் ஓய்வெடுக்கலாம் என தெரிகிறது.

ஓய்வுக்கு பின், நடிகர் பிரபாஸ், இயக்குனர் மாருதியின் ராஜா சாப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.