81 வயது மூதாட்டி கர்பம் வயிற்றில் இருக்கும் குழந்தை கல்லாக மாறிய அதிசயம் !

81 வயது மூதாட்டி கர்பம் வயிற்றில் இருக்கும் குழந்தை கல்லாக மாறிய அதிசயம் !

81 வயதாகும் டானியேலா என்ற இந்த மூதாட்டி, வயிற்று வலி காரணமாக வைத்தியசாலை சென்றார். அங்கே அவரை ஸ்கேன் செய்து பார்த்தவேளை, அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். 81 வயதில் கர்பமா ? கிடு நடுங்கிய வைத்தியசாலை வட்டாரங்கள், கடைசியாக யாருடன் தொடர்பில் இருந்தீர்கள் என்று எல்லாம் கேள்விகளை கேட்க்க அந்த மூதாட்டியோ மிகவும் குழப்பில் போனார்.

அல்ரா ஸ்கேன் செய்தவேளை, அந்தக் குழந்தை அசையாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் குழந்தை இறந்துவிட்டது என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தார்கள். இன் நிலையில் மேலும் பல பரிசோதனைகள் செய்தவேளை. டானியேலா, கடந்த 50 வருடமாக இந்தக் குழந்தையை வயிற்றில் சுமந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 7 பிள்ளைகளின் தாயாரும் மேலும் 40 பேரப்பிள்ளைகளும் டானியேலாவுக்கு இருக்கிறார்கள். இவர்கள் ஒரு ஆதிக் குடி வாசிகள். பிரேசில் நாட்டில் பரகுவேக்கு பக்கமாக உள்ள காட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

இன் நிலையில் கல்லாம மாறியுள்ள அந்த சிசுவை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்து, சத்திர சிகிச்சை மூலம் அந்த கல் குழந்தையை வெளியே எடுத்தார்கள். ஆனால் மறு நாளே டானியேலா பரிதாபமாக இறந்துவிட்டார். மிகவும் அரிய வகையான இந்தக் குழந்தை, பிறக்காமலே இறந்து, பின்னர் கல்லாக மறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் குழந்தை கல்சியம் படிந்த கல்லாக எப்படி மாறியது என்பது தொடர்பாக மருத்துவர்கள் பெரும் ஆராட்சி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.