பிரைம்(Prime) என்ற Energy Drink க்காக அடி படும் லண்டன் மக்கள்- அரசு தடை செய்ய உள்ளதால் அபாயம்

இந்த செய்தியை பகிர

பிரித்தானியா மட்டும் அல்ல, பல ஐரோப்பிய நாடுகளில் டீன் ஏஜ், நபர்கள் அடிபட்டு வாங்கும் உட்சாக பாணமாக இருப்பது பிரைம். யூரியூப் வழியாக இது பிரபல்யம் அடைந்து, சிறுவர் சிறுமியர் தொடக்கம் பெரிசுகள் வரை இந்த உட்சாக பாணத்தை வாங்க கடைகளில் வரிசையாக நின்று வருகிறார்கள். சில கடைக்காரர்கள் இதனை மலிந்த விலையில் எடுத்து, சுமார் £10 பவுண்டுகள் வரை விற்பனை செய்கிறார்கள். மேலும் கறுப்பு மார்கெட்டில் இதன் விலை சுமார் 100 பவுண்டுகள் வரை செல்கிறது. அப்படி என்ன தான் இருக்கிறது ?

என்று பலர் ஆவலாக இதனை வாங்கிப் பருகிப் பார்க்கவேண்டும் என்று நினைப்பதால். இதன் மவுசு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு செல்லும் நிலையில். பல ஆயிரம் பிரைம் உட்சாக பாணத்தை, அரசு அழித்துள்ளது. காரணம் இதில் பலவிதமான நச்சுப் பொருட்கள் உள்ளது என்றும். மனிதர் அருந்தக்கூடிய வகையில் பிரைம் உட்சாக பாணம் இல்லை என்றும், பிரித்தானிய அரசின் சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. இது மிகவும் ஆபத்தான நச்சு திரவங்களை கொண்ட பாணம் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதனால் பிரைம் உட்சாக பாணத்தை, மீண்டும் சரியான முறையில் தயாரிக்க குறித்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தொடர்ந்தும் சூப்பர் மார்கெட்டில் இந்த பாணத்தை வாங்க மக்கள் வரிசை கட்டி நிற்பதும். சண்டையிடுவதும் நடைபெற்று வருகிறது, வீடியோ இணைப்பு.


இந்த செய்தியை பகிர