முழு அரச குடும்பமுமே மனைவியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் ஹரி கோரிக்கை !

Spread the love

பிரித்தானிய அரச குடும்பம் முழுவதுமாக இணைந்து, எனது மனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று, இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். அவரது புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ள நிலையில். பிரித்தானிய மக்களிடையே அவரது செல்வாக்கு பெரும் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் சொல்லப் போனால், அவர் ஒரு மன நோயாளி என்றும், கனவு உலகத்தில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் கருதத் தொடங்கியுள்ளார்கள்.

இல்லாத பல கட்டுக் கதைகளை அவர் சொல்லி வருவதோடு, பணத்தையும் புகழையும் சம்பாதிக்க இவ்வாறு அவர் குறுக்கு வழியில் செல்வதாகப் பலர் கருதுகிறார்கள். அம்மா இறந்ததில் இருந்து இருந்து அவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்றும். அப்பா மற்றும் அவரது அண்ணா வில்லியம் ஆகியோர் அவரை சரிவரக் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது. ஆனால் அவரது மனைவியை அரச குடும்பம் கேவலமாக நடத்தியது என்பது, எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.