மகள் மற்றும் கணவரோடு Pஸ்2 பார்த்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்

Spread the love

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை குவித்து வருகிறது என்பதும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூலை அடைவது உறுதி என்றும் கூறப்பட்டு வருகிறது. முதல் நாளே இந்த படம் ரூ.65 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில் முதல் பாகம் போலவே ரூ.500 கோடியை வசூல் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் நந்தினி மற்றும் ஊமை ராணி ஆகிய இரண்டு கேரக்டரில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிப்பு வேற லெவல் என்றும் அவருக்கு தேசிய விருது கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியே விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் இன்று சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர்களுடன் ’பொன்னின் செல்வன் 2’ திரைப்படம் பார்த்தார்.

அவர்களுடன் விக்ரம், ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்டவர்களும் இந்த படத்தை பார்த்தனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.