தனுஷின் ராயன் இந்தியன் 2 இந்த 2 படங்களின் ரிலீஸில் உள்ள பெரும் சிக்கல் இதுதான் !

தனுஷின் ராயன் இந்தியன் 2 இந்த 2 படங்களின் ரிலீஸில் உள்ள பெரும் சிக்கல் இதுதான் !

தனுஷ் நடித்து வெளிவர உள்ள “ராயன்” மற்றும் கமல்- விஜய் சேதுபதி நடித்து வெளியாக உள்ள இந்தியன் – 2 ஆகிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லாமே தேர்தல் தான். ஏப்பிரல் 19 தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. மேலும் ஆந்திராவில் மே 13 தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் தான் தமிழ் படங்கள் கொள்ளை வசூலை அள்ளும். இதனால் மே மாதம் ரிலீஸ் ஆக இருந்த இந்த இரண்டு படங்களையும் மே 13 பின்னர் திரையிடலாம் என படக் குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது எங்கே பார்த்தாலும் , தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. கட்சிக் கூட்டங்கள். போஸ்டர்கள் பேனர்கள் என்று பெரும் அமளியாக இருக்கிறது. இன் நிலையில் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடுவது என்பது முடியாத காரியம். இதன் காரணத்தால் தான் இந்த 2 படங்களையும் தள்ளிப் போட முடிவு செய்யப்பட்டதாம்