9 பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள கேலக்ஸ்சியில் இருந்து இந்தியாவுக்கு கிடைத்த சிக்னல்..

Spread the love

சுமார் 9 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள, நட்சத்திரக் கூட்டம் ஒன்றிலிருந்து ரேடியோ சிக்னல் ஒன்று கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஒலி வாங்கிக்கு இது கிடைக்கப்பெற்றுள்ளது. உடனே நாம் பூமியில் பாவிக்கும் ரேடியோ FM சிக்னல் என நினைத்துவிட வேண்டாம். இது போன்ற ரேடியோ சிக்கனல் மிகவும் அரிதான ஒன்று. காரணம் இவை நட்சத்திர வெடிப்பு அல்லது ஒரு நட்சத்திரக் கூட்டம் முதல் முதலில் உருவாகும் போது உற்பத்தியாகிறது. மிக மிக வலிமையானவை. இவை..

பல பில்லியன் மைல் தொலைவு வரை செல்ல வல்லவை. தற்போது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இந்த சிக்னல் சுமார் 13.7 பில்லியன் ஒளியாண்டு பழமையானது. மேலும் சொல்லப் போனால் இவை, சுமார் 4.5பில்லியன் ஆண்டாக பயணித்து இறுதியில் பூமியைக் கடந்து சென்றுள்ளது. கிடைத்திருக்கும் இந்த சிக்னலை இந்திய விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, பல வெளிநாட்டு விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருகிறார்கள். இதில் பல அபூர்வமான தகவல்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கிடைத்திருக்கும் சிக்னலில் உள்ள, ஒலியின் அடர்த்தி. அதில் காணப்படும் துகள்கள் அதன் வேகம் என்பனவற்றை வைத்துப் பல ஆராட்சிகளைச் செய்ய முடியும். மேலும் அது வந்த திசை என்று பலவற்றைக் கண்டு பிடிக்கவும் முடியும். இதனூடாக இந்த பால்வெளி நட்சத்திரக் கூட்டங்கள் எப்படித் தோன்றுகிறது ? எவ்வாறு உருவம் பெறுகிறது ? எத்தனை ஆண்டுக்கு முன்னர் தோன்றியது என்பது போன்ற உண்மைகளைக் கண்டறிய முடியும்.