சந்திர ஒளியில் போட்டோ ஷூட் எடுக்கும் ரகுல் ப்ரீத் சிங் இது தான் புதுமை !

Spread the love

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் நடித்தார்.

தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர், சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மாடர்ன் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.