ஒத்த பைசா கூட வேண்டாம்… சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் – ஏன் தெரியுமா?

ஒத்த பைசா கூட வேண்டாம்… சம்பளமே வாங்காமல் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் – ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வயது 73 ஆகியும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்த வருகிறார். மாஸ் ஹீரோவாக இளம் ஹீரோக்களுக்கு டாப் கொடுத்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் மாபெரும் வெற்றியை படைத்தார் அந்த படத்தை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ஆகிவிட்டது.

அந்த படத்தை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்ததாக ஹைதராபாத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 75% ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் விரைவில் முழுமையாக முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் சுத்தமாக பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். ரஜினியை வைத்து எஸ்பி முத்துமாராமன் ஏகப்பட்ட வெற்றி திரைப்படங்களைக் கொடுத்தவர். அவர்கள் இருவரும் இணைந்தாலே ஹிட் என்ற நிலை தான் இருந்தது.

தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டா முத்துராமன் தன்னுடைய ஆசைப்படி ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என நினைத்தாராம். இதை ரஜினியிடம் கூற ரஜினி உடனே உங்களது தயாரிப்பில் நான் நடிக்கிறேன் எனக்கூறிய ரஜினிகாந்த் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம். அந்த படம் தான் “பாண்டியன்” இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.