
நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்……..
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். 2015 ல் “டம்மி டப்பாசு” என்ற திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின் 2016 ல் “ஜோக்கர்” ஹீரோயினாக அறிமுகமானார். 2018 ல் சமுதிரகனியுடன் இணைந்து “ஆண் தேவதை” என்ற படத்தில் நடித்துப் பிரபலமானார்.
அதன் பின் 2019 ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். 2020 ல் “கலக்க போவது யாரு” சீசன் 9 ல் நடுவராக இருந்தார். 2021 ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 4 ல் கலந்துகொண்டு விளையாடினார். பின் வெளியேறியதும் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
தற்போது “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படவாய்ப்புகள் அதிகம் இல்லாததால் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற தாவணியில் இளசுகளின் மனதை வருடுகிறார்.


