செல்வச்செழிப்புமிக்க பணக்கார குழந்தை – 1 வயசு மகளுக்கு இத்தனை கோடி சொத்தா?

குழந்தை

பாலிவுட் நட்சத்திர ஜோடியாக சிறந்து விலகி வருபவர்கள் நடிகை ஆளியாபட் மற்றும் ரன்பீர்கபூர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் பெரும் பணக்கார நட்சத்திர ஜோடியாக பாலிவுட்டில் பார்க்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது நட்சத்திர தம்பதிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. உலகை திரும்பி பார்க்கும் வகையில் இவர்களது திருமணம் இருந்தது. தொடர்ந்து திருமணம் ஆன சில மாதங்களிலேயே ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். அவருடைய பெயர் ரஹா கபூர். மகளின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும்.

குறிப்பாக அவரது முதல் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீய பரவியது. இந்நிலையில் ஆலியா பட் ரன்பீர் கபூர் மகளுக்கு இருக்கும் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் வியப்படையை செய்துள்ளது. ஒரு வயசு குழந்தைக்கு இத்தனை கோடி சொத்தா என்கிற அளவுக்கு எல்லோரும் வாயடைத்து போய்விட்டார்கள்.

ஆம், கிட்டத்தட்ட ரூ.250 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை மகளுக்காக வாங்கியுள்ளதாக பாலிவுட் செய்திகள் கூறுகிறது. மும்பையில் உள்ள பாந்தாரா என்னும் இடத்தில் மகள் ரஹா கபூர் என்கிற பெயரில் தான் இந்த பங்களாவை வாங்கி இருக்கிறாராம் ரன்பீர் கபூர். இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ரன்பீர் கபூர் மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.