ஒர்க்-அவுட் செய்து உடலை வருத்திக்கொள்ளும் ரஞ்சிதமே நாயகி!

Spread the love

நடிகை ரஷ்மிகாவின் வைரலாகும் வெறித்தனமான ஒர்க் அவுட் வீடியோ…..

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் நடிகை ரஷ்மிகா சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ”கீதா கோவிந்தம்” என்ற படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

2021 ல் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ”சுல்தான்” என்ற படத்தில் நடித்துள்ளார்.2023 ல் தளபதியுடன் இணைந்து ”வாரிசு” படத்தில் நடித்துள்ளார்.தற்போது சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.இவ்வளவு பிஸியாக இருக்கும் ரஷ்மிகா தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும் ஒல்லியாக இருக்கவும் அதிகம் விரும்புகிறார்.

இந்நிலையில் தினமும் காலையில் எழுந்ததும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயற்சிகளுக்கு தன் நேரத்தை ஒதுக்குகிறார்.தற்போது தனது ஒர்க் அவுட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் உடலை வருத்திக்கொண்டு ஒர்க் அவுட் செய்யும் ரஞ்சிதமே என்று கமன்ட் செய்துள்ளனர்.