
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா. 2013 ல் “மெட்ராஸ் கஃபே” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2014 ல் “மனம்” படத்தில் நடத்து தெலுங்கில் அறிமுகமானார். பின் ஓஹலு குசகுசலாடே, ஜோரு, ஜில், சிவம், வங்காள புலி, உச்சம், ஹைப்பர், உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.
2018 ல் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் அடங்கா மறு, சங்கத் தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சார்தார், உள்ளிட்ட படங்கள் தமிழில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களிலும் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் தேவதையாகக் காட்சியாளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.





