அனிமல் படத்துக்கு பிறகு அடுத்த பாலிவுட் படத்தை முடித்த ராஷ்மிகா!

அனிமல் படத்துக்கு பிறகு அடுத்த பாலிவுட் படத்தை முடித்த ராஷ்மிகா!

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் பாலிவுட்டில் நடித்த அனிமல் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்திய அளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனை படைத்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் விக்கி கௌஷாலுடன் அவர் இணைந்து நடிக்கும் ஜாவா படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இது ராஷ்மிகா நடிக்கும் நான்காவது பாலிவுட் படமாகும்.