பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டால்…

Spread the love
மாளவிகா

நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்……

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான “பேட்ட” என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகத் தமிழில் மாளவிகா அறிமுகமானார். அதுமட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். 2013 ல் “பட்டம் கம்பம்” என்ற திரைப்படத்தின் மூலம் முதலில் நடிக்கத் தொடங்கினார்.

அதனை தொடர்ந்து கன்னடத்தில் ‘நானு மாட்டு வரலஷ்மி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பேட்ட படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். பின் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார். பின் விக்ரமுடன் “தங்கலான்” படத்தில் நடித்துள்ளார்.

தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் இணையத்தில் சுறு சுறுப்பாக இருக்கிறார். படபிடிப்புகள் முடிந்து சென்னைக்கு திரும்பிய மாளவிகா “ஹலோ சென்னை” என்று கையில் பூ கொத்துடன் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.