மீண்டும் இணையும் பிரபுதேவா வடிவேலு கூட்டணி… காமெடி சரவெடிக்கு தயாரா?

மீண்டும் இணையும் பிரபுதேவா வடிவேலு கூட்டணி… காமெடி சரவெடிக்கு தயாரா?

90 களில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்து வந்த போது அவரின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக வடிவேலு நடித்துள்ளார். அவர்கள் இணைந்து நடித்த காதலன், ராசய்யா, மனதை திருடிவிட்டாய் போன்ற படங்களின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் சிலாகிக்கப்படுகின்றன.

அதன் பிறகு பிரபுதேவா இயக்குனரான பின்னர் அவர் படங்களில் வடிவேலு நடித்தார். அந்த காமெடிக் காட்சிகளும் மறக்க முடியாதவையாக அமைந்தன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை பொன்ராமிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜா என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘லைஃப் ஈஸ் ப்யூட்டிபுல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிரபுதேவா & வடிவேலுவின் விண்டேஜ் நகைச்சுவைக் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.