மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி!

மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணி!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் பூஜையோடு தொடங்கியது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். கடைசியாக இருவரும் டான் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.