பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் என அறிவித்தார் ரிஷி

பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது ஜூலை 4ம் திகதி பொதுத் தேர்தல் என அறிவித்தார் ரிஷி

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக், மன்னர் சார்ளசை இன்று சந்தித்து உரையாடிய பின்னர். பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் வரும் ஜூலை 4ம் திகதி இடம்பெறும் என்று அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது கடும் மழை பெய்து வருகிறது. சற்றும் ஓய்வின்றி பெய்து வரும் மழைக்கு மத்தியில், கடுமையாக நனைந்த நிலையில் ரிஷி சுண்ணக் அவர்கள், இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

எவரும் குடை ஒன்றைக் கூட பிடிக்கவில்லை, அத்தோடு கூடாரம் எதுவும் அமைக்கப்படவும் இல்லை. கடும் மழையில் அவரது கோட்- சூட் நனைந்து காணப்பட்டது மீடியாக்களில் பேசுபொருளாக அமைந்துள்ளது. ஜூலை 4ம் திகதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் ரிஷி சுண்ணக்கின் கட்சி படுதோல்வியடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. நிச்சயம் லேபர் கட்சியே ஆட்சியை அமைக்கும் என்ற நிலை தோன்றியுள்ளது.

பொதுவாக இப்படி ஒரு பெரும் தோல்வி ஏற்பட்டால், தோல்வியடைந்த கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பிரித்தானிய மரபு முறை ஆகும். ஆனால் இந்த முறை அப்படி ரிஷி செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தோற்றாலும் அவர் எதிர்கட்சித் தலைவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. எதுவும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.