இரவு முழுவதும் தூங்காமல் இருந்த ரிஷி மேயர் தேர்தலில் படு தோல்வியடையும் நிலையில்

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த ரிஷி மேயர் தேர்தலில் படு தோல்வியடையும் நிலையில்

நேற்றைய தினம்(2) பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் சுமார் 107 கவுன்சில்களின் மேயர் தேர்தல் இடம்பெற்றது. லட்சக் கணக்கான வாக்காளர்கள் தமது வாக்குகளை செலுத்தியுள்ள நிலையில். டோரி கட்சி(சுண்ணக்) படு தோல்வியடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இரவோடு இரவாக வாக்குகள் எண்ணுவது ஆரம்பமாகியுள்ள நிலையில். தொடர்ச்சியாக பல இடங்களில் லேபர் கட்சி முன் நிலையடைந்து வருகிறது.

இதனால் நேற்றைய தினம் இரவு முழுவதுமாக ரிஷி சுண்ணக், உறக்கம் இன்றி பல சந்திப்புகளை மேற்கொண்டு வந்தார் என்று மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதுபோக ரிஷி சுண்ணக்கிற்க்கு அவரது சொந்தக் கட்சியிலேயே சில எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. நடந்து முடிந்த இந்த தேர்தலில் டோரிக் கட்சி தேல்வியடைந்தார், அந்த உள் கட்சி எதிர்ப்பு மேலும் பலமடைந்து விடும். கட்சியின் தலைவரான ரிஷி சுண்ணக்கை மாற்ற வேண்டும் என்று கட்சி முடிவை எடுத்தால்.

சேர்ந்தே அவரது பதவியும் பறிபோகும், இதனால் என்ன செய்வது என்று கடுமையாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார் ரிஷி. ஆனால் மறு புறம் பிரித்தானியாவில் வாழ்வதே மிகக் கடுமையாக மாறிவிட்டது. தற்போது பெற்றோல் விலையும் அதிகரித்துள்ள நிலையில். நாட்டில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது இன்னும் குறைவடைய வில்லை. இதனால் மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளார்கள். மக்கள் இதனைக் கருத்தில் கொண்டு ஒரு மாற்றம் வேண்டும் என்று கருதி லேபர் கட்சிக்கே தனது வாக்குகளை போட்டிருப்பார்கள். இதனால் 107 இடங்களில் சுமார் 80 தொடக்கம் 90 இடங்களை லேபர் கட்சி கைப்பற்றக் கூடும் என்று எதிர்பார்கப்படுகிறது.

தேர்தல் விபரங்களை நாம் உடனுக்கு உடன் அறியத் தர உள்ளோம். அதனால் அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்.