ரிஷியின் மருமகள் வெறும் 4 மாத குழந்தைக்கு 22 மில்லியன் ஷியார் கொடுத்த தாத்தா !

ரிஷியின் மருமகள் வெறும் 4 மாத குழந்தைக்கு 22 மில்லியன் ஷியார் கொடுத்த தாத்தா !

பிரித்தானிய பிரதமர் ரிஷியின் மனைவி பற்றி நாம்மில் பலர் அறிந்திருப்பார்கள். அக்ஷ்டா வின் அப்பா தான் இன்ஃபோசிஸ் நாரயணன். அவர் பெரும் மல்டி பில்லியனர் என்பது ஊர் அறிந்த விடையம். இன் நிலையில் ரிஷியின் மனைவியின் தம்பியாருக்கு குழந்தை பிறந்துள்ளது. வெறும் 4 மாதமே ஆகும் அந்தப் பெண் குழந்தைக்கு சுமார் 22 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான, சொத்துகளை கொடுத்துள்ளார் இன்ஃபோசிஸ் நாரயணன்.

இதனூடாக மிக மிக குறைந்த வயதில், பெரும் செல்வந்தராக மாறியுள்ள குழந்தை இவர் தான் என்ற பட்டப்பெயர் கிடைத்துள்ளது. இது இவ்வாறு இருக்க, ரிஷி சுண்ணக்கின் 2 பெண் பிள்ளைகளுக்கும் , நாரயணன் பெரும் தொகைப் பணத்தை கொடுத்துள்ளார். அவர்கள் பெயரில் மட்டும் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் டெபாசிட் ஆகியுள்ளது. இது தாத்தாவின் பரிசு ஆகும். அட இத்தனை மில்லியன் பவுண்டுகளை அள்ளி வழங்குகிறாரே என்று நினைக்கவேண்டாம்.

அவரது இன்ஃபோசிஸ் IT கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் £80பில்லியன்(மில்லியன் அல்ல பில்லியன்) ஆகும். அந்தப் பணத்தோடு ஒப்பிடும் போது, 100 மில்லியன் பவுண்டுகள் என்பது எல்லாம் அவருக்கு தூசி தான் !