விஜய்யை சந்தித்த ஆர் ஆர் ஆர் பட தயாரிப்பாளர்…!

விஜய்யை சந்தித்த ஆர் ஆர் ஆர் பட தயாரிப்பாளர்…!

விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்போது சென்னை கோவளம் பகுதியில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த படத்துக்குப் பிறகு விஜய் எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தைத் தயாரித்த டி வி வி டனய்யா விஜய்யை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.