4 பேரையும் பிடித்து அதே இடத்தில்வைத்து துப்பாக்கியால் அடித்து தாடையை உடைத்த ரஷ்யா உளவுப் படை

4 பேரையும் பிடித்து அதே இடத்தில்வைத்து துப்பாக்கியால் அடித்து தாடையை உடைத்த ரஷ்யா உளவுப் படை

மொஸ்கோ மண்டபத்தில் 4 தீவிரவாதிகள் நுளைந்து சரமாரியாகச் சுட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் ஒரு வெள்ளை நிற ரெனோல்ட்(Renault car)  காரில் மண்டபத்தினுள் நுளைந்துள்ளார்கள். தூப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவர்கள் அதே காரில் தப்பிச் சென்றுள்ளார்கள். இதனை இரவோடு இரவாக CCTV மூலம் ஆராய்ந்த ரஷ்ய உளவுப் படை, நாடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய நிலையில்.

மொஸ்கோவில் இருந்து 400KM தொலைவில் உள்ள, “பிரன்ட்ஸ் ஒஸ்கா” என்னும் கிராமத்தில் குறித்த வெள்ளைக் கார் பயணிப்பதை அவதானித்த உளவுப் படை. கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களில் சிலரை பிடித்துள்ளார்கள். அதில் ஒருவரை முட்டிக் காலில் நிற்க வைத்துள்ளார்கள். பின்னர் அவரை வாகனத்தில் ஏற்றும் போது பார்த்தால் தாடை உடைந்து ரத்தம் கசிந்த வண்ணம் உள்ளது. பிடி பட்ட இடத்தில் வைத்தே உளவுப் படை அவர் மீது காட்டிமிராண்டி தாக்குதல் நடத்தியுள்ளது என்றால்.

சிறையில் அவர் எதை எதையெல்லாம் அனுபவிப்பாரோ தெரியவில்லை. மேலும் 11 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இந்தப் 11 பேரும் இவர்களோடு தொடர்பில் உள்ள நபர்கள் என்று கூறப்படுகிறது.  ரஷ்ய சிறையில் சுமார் 6,000 முஸ்லீம்கள் உள்ளார்கள் என்பது பலருக்குத் தெரியாது. இதேவேளை, “எமக்கு பணம் தந்தார்கள் நாம் சுட்டோம். ஆனால் திடீரென பார்த்தால் ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ளார்கள்” என்று பிடிப்பட்ட 4 பேரில் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுவே மிகவும் குழப்பமாக உள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினாலும். இதனை உக்ரைன் செய்தது என்று பழி போடவே ரஷ்யா முனைப்புக் காட்டி வருகிறது.