ஒரே நாளில் 1,740 ரஷ்ய ராணுவத்தினர் பலி என்கிறது உக்ரைன் ராணுவம் – உண்மை என்ன ?

ஒரே நாளில் 1,740 ரஷ்ய ராணுவத்தினர் பலி என்கிறது உக்ரைன் ராணுவம் – உண்மை என்ன ?

ரஷ்ய உக்ரைன் எல்லையில் உள்ள கார்-கிஃவ் என்னும் நகரைப் பிடிக்க, ரஷ்யா கடும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. கார் கிஃவ் நகருக்கு அருகே உள்ள சில கிராமங்களை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ரஷ்யா கைப்பற்றி இருந்தது. இதனால் ரஷ்யா வேகமாக முன்னேறி வருவதாக, மேற்க்கு உலகம் நம்பி இருந்தது. இதனை தடுக்க, நேட்டோ தனது படையணியில் உள்ள சிறந்த வீரர்களை அனுப்பி, அவர்கள் வழி நடத்தலில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டது.

இதனை அடுத்து உக்ரைன் மண்ணில் நேட்டோ படை அணி கால் வைத்தால், ஐரோப்பாவை தாக்க பின் நிற்கப் போவது இல்லை என்று புட்டின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் உக்ரைன் திடீரென மின்னல் வேக தாக்குதல் ஒன்றை நடத்தி ரஷ்யாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரே நாளில் சுமார் 1,740 ரஷ்ய ராணுவம் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா எந்த ஒரு அறிவித்தலையும் வெளியிடவில்லை. இறந்த ரஷ்ய ராணுவத்தினரின் உடல்களை உக்ரைன் காட்டவில்லை. இருப்பினும் 42 ரஷ்ய கவச வாகனங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. இதில் இருந்த ராணுவத்தினர், பின்னர் அவர்களுக்கு உதவ வந்த ராணுவத்தினர் என்று ஒட்டு மொத்தமாக 1740 பேரை தாம் ஒரே நாளில் கொன்றுவிட்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைன் கூறுவது உண்மை என்றால், 2022ல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை, இதுவே ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான இழப்பு ஆகும்.