ரஷ்ய கடல் எல்லையில் அமெரிக்க போர் விமானம் ! அதனை கலைக்க 2 போர் விமானத்தை அனுப்பிய புட்டின் !

ரஷ்ய கடல் எல்லையில் அமெரிக்க போர் விமானம் ! அதனை கலைக்க 2 போர் விமானத்தை அனுப்பிய புட்டின் !

 

140க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்றைய தினம், அதனை தேசிய துக்க தினமாக அறிவித்தார் புட்டின். இன் நிலையில் அமெரிக்காவின்,  இரண்டு  US B-1B என்ற சூப்பர் சோனிக் விமானம் ரஷ்ய கடல் எல்லையில் பறந்துள்ளது.

32 நேட்டோ நாடுகள் இணைந்து நோர்வே கடலில் பெரும் போர் ஒத்திகை ஒன்றை நடத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இது போன்ற ஒரு பெரிய ஒத்திகை நடந்ததே இல்லை என்று கூறும் அளவில். பெரும் எடுப்பிலான போர் ஒத்திகை பார்கப்படுகிறது. இதனால் ரஷ்யா கடும் அதிருப்த்தியில் உள்ளது.

இந்த நிலையில் தான் அமெரிக்காவின் அதி நவீன சூப்பர் சோனிக் விமானங்கள் 2 ரஷ்ய கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவை 146 அடி நீளம் கொண்டவை, 75,000 பவுண்டுகள் எடை கொண்ட அணு குண்டுகளை இருப்பில் உள்ளவை. அது போக ஒலியை விட வேகமாகச் செல்லக் கூடியவை.

ரஷ்ய வான் படை உடனடியாக இரண்டு MiG-31 விமானங்களை, அமெரிக்க விமானம் பறக்கும் கடல் பரப்புக்கு அனுப்பியுள்ளது. இருப்பினும் அமெரிக்க விமானம் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுவிட்டதால், ரஷ்யாவின் மிக் 32 விமானங்கள் மீண்டும் தளம் சென்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.