காதை வெட்டி எறிந்த ரஷ்ய புலனாய்வு.. நீதிமன்றம் செல்ல முன்னர் நடந்த கொடூரம் …

காதை வெட்டி எறிந்த ரஷ்ய புலனாய்வு.. நீதிமன்றம் செல்ல முன்னர் நடந்த கொடூரம் …

கடந்த வெள்ளி இரவு, மொஸ்கோவில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தவேளை அங்கே புகுந்த 4 ஆயுததாரிகள் சரமாரியாகச் சுட்டதில் 140க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்தார்கள். தப்பி ஓடிய அந்த 4 பேரையும் ரஷ்ய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்தார்கள். அதில் ஒரு நபரை அந்த இடத்திலேயா வைத்து, துப்பாக்கி பிடியால் அடித்து தாடையை உடைத்தார்கள். பின்னர் 4 பேரையும் கொண்டு சென்று, விவரிக்க முடியாத அளவு சித்திரவதை செய்துள்ளார்கள்.

பின்னர் ஞாயிறு அன்று அவர்களை சிறப்பு நீதிமன்றம் கொண்டு சென்றார்கள். அந்தவேளை 4ல்வரில் ஒருவரான, “சிடாக்-கராமி” என்ற நபர் காதுக்கு அருக்கே பண்டேஜ் போட்டு இருந்தார். பலரும் அவருக்கு அடி காயம் ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவருக்கு ஒரு காது இல்லையாம். ரஷ்ய புலனாய்வுப் பிரிவில் உள்ள நபர் ஒருவர், “சிடாக்-கராமியின்” காதை வெட்டி அந்த துண்டை தூரமாக வீசி எறிந்துவிட்டார்.

காதை இந்த கத்தியால் தான் வெட்டினேன் என்று, கத்தியின் படத்தையும், தான் கையில் வைத்திருக்கும் கத்தியை பாருங்கள் என்று சொல்லியும் அந்த ராணுவப் புலனாய்வு நபர் சமூக வலையத் தளத்தின் தனது புகைப்படத்தைப் போட்டுள்ளார். இது சோஷல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ரஷ்ய மக்களே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ரஷ்யாவில் ஒரு ஜனநாயம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். இலங்கையில் சுமார் 2 லட்சத்தில் 10,000 ஆயிரம் ரஷ்யர்கள் தற்போது தங்கியுள்ளார்கள் என்பதும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல்.

ரஷ்யாவில் இருந்து வாரம் 4 நாட்களுக்கு விமான சேவை ஒன்று இலங்கைக்கு விடப்பட்டுள்ளது. இலங்கை வரும் ரஷ்யர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து விசா காலியான பின்னரும் தங்கியுள்ளார்கள். இலங்கை அரசும் கண்டுகொள்ளவில்லை. உக்ரைன் போர் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இலங்கை வந்து பல மாதங்களாக தங்கியுள்ளார்கள். இவர்களில் சிலர் மீண்டும் ரஷ்யா சென்றுவிட்டார்கள், மேலும் பலர் இன்னமும் இலங்கையில் உள்ளார்கள். ரஷ்யா மீது நேட்டோ நிச்சயம் தாக்குதல் நடத்தும். என்பதே இந்த ரஷ்யர்களின் பயமாக உள்ளது.