டூ பீஸ் உடையில் நடிக்க பல கோடி கேட்கும் சமந்தா – எவ்வளவு தெரியுமா?

டூ பீஸ் உடையில் நடிக்க பல கோடி கேட்கும் சமந்தா – எவ்வளவு தெரியுமா?

பிரபல நட்சத்திர நடிகையான சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிக ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கிலும் டாப் நடிகையாக இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அங்கு பிரபல இளம் ஹீரோவான நாக சைதன்யாவை பல வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்களிலே முடிவுக்கு வந்துவிட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து ஒருவருக்கொருவர் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து சமந்தா தமிழ் திரைப்படங்களிலு,ம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சில பல தோல்விகளையும் சந்தித்து வருகிறார். இவர் முன்பை விட இப்போ அதிகம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இதனிடையே மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா சிகிச்சை எடுத்து தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் தனது தொழிலை கைவிடாமல் தொடர்ந்து சினிமா தொழிலில் கவனத்தை செலுத்தி வரும் நடிகை சமந்தா பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகி அங்கும் கவர்ச்சி நடிகை பலம் வந்து கொண்டிருக்கிறார். தாறுமாறாக கிளாமரை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா. வெப் சீரிஸ், கவர்ச்சி கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பணத்தை அள்ளிக்கொடுத்தால் தாராளமாக நடிக்கிறேன் என ஓப்பனாகவே கூறி வருகிறாராம்.

இந்த நிலையில் சமந்தா சம்பள விவரம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. படங்களில் நடிக்க ரூ. 7 கோடி, வெப் தொடரில் நடிக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் சமந்தா, விளம்பரங்களில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். சமீபத்தில் ஐஸ் க்ரீன் விளம்பரத்தில் நடித்த சமந்தா அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.