சந்தீப் ரெட்டி மிகவும் வெளிப்படையானவர்- புகழ்ந்து தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்!

சந்தீப் ரெட்டி மிகவும் வெளிப்படையானவர்- புகழ்ந்து தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

படத்தை விட இயக்குனர் சந்தீப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ள்தாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதே போல தன்னையும் தன் படத்தையும் விமர்சிப்பவர்களையும் அவர் இடதுகையால் டீல் செய்வது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது சிவகார்த்திகேயன் சந்தீப் ரெட்டியை மிகவும் வெளிப்படையானவர் என புகழ்ந்துள்ளார். அதில் “அவரின் கலை குறித்த பார்வை எனக்குப் பிடிக்கும். குறிப்பாக அவர் இசையயைப் பயன்படுத்தும் விதம் எனக்கு பிடிக்கும். அனிமல் படம் பார்த்தேன். அவர் படங்களை விட அவரது நேர்காணல்கள் மிகவும் வெளிப்படையாக உள்ளன” எனக் கூறியுள்ளார்.