சவுக்கு சங்கருக்கே பேக்கில் சவுக்கடி ! லைக்கா எடுத்த கம்பீர நகர்வு- Youtube வருமானத்தை இழந்தார் !

சவுக்கு சங்கருக்கே பேக்கில் சவுக்கடி ! லைக்கா எடுத்த கம்பீர நகர்வு- Youtube வருமானத்தை இழந்தார் !

“சவுக்கு சங்கர்” என்று, தனக்குத் தானே பெயரை வைத்துக்கொண்டு, பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்துவந்த இவருக்கு பெரும் சவுக்கடி விழுந்துள்ளது. போதைப் பொருள் கடத்தும் கும்பலோடு லைக்கா நிறுவனத்திற்கு தொடர்பு உள்ளது என்று, படு கேவலமாக பொய்களை பேசி ஒரு பதிவை யூ-ரியூபில் வெளியிட்டார் இந்த சவுக்கு ஷங்கர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் லைக்கா நிறுவனம் வழக்கு ஒன்றை தொடுத்தது.

உலகளாவிய ரீதியில் நற்பெயரைக் கொண்டுள்ள லைக்கா நிறுவனம் பற்றி அவதூறு பேசியதற்காக, 1 கோடி ரூபா நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், யூ-ரியூபினால் அவருக்கு கிடைத்த வருமானத்தை டெபாசிட் செய்யவேண்டும், மேலும் அந்த வீடியோவை அகற்ற வேண்டும் என்று கோரியது லைக்கா. இந்த மனு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி மற்றும் வழக்கறிஞர் அரவிந்த் ஸ்ரீவத்சவா ஆகியோர், ’யூடியூப்-பில் அதிக பார்வையாளர்களை பெற வேண்டும் என்ற நோக்கத்திலியே இது போன்ற அவதூறு கருத்துகளை வெளியிடுகிறார் சவுக்கு ஷங்கர் என்று வாதிட்டார்கள்.

இதனையடுத்து, லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இந்த வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த யூ டியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், யூடியூப்பில் உள்ள வீடியோக்களை நீக்குவது தொடர்பாக சவுக்கு சங்கர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் லைக்கா நிறுவனம், 1 கோடி மான நஷ்டம் கோரியுள்ளது. இதனையும் சவுக்கு ஷங்கர் செலுத்தவேண்டி உள்ளது. அடுத்த மாதம் 12ம் திகதி அதிரடியான தீர்ப்பு ஒன்று வர உள்ளது.

மத்திய அரசின் கைக் கூலியாக செயல்பட்டு வரும் சவுக்கு ஷங்கர், வீர வசனங்கள் பேசி பொய்யான தகவலை உரகச் சொல்லி மக்களை நம்ப வைத்து பணத்தை சம்பாதித்து வயிறு வளர்த்து வருகிறார். பல உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டு, அதனூடாக பல லட்சம் வாசகர்களை தனது சேனலைப் பார்க்கவைத்து பணம் சம்பாதிக்கிறார். இது ஒரு ஊடக விபச்சாரம் செயல் ஆகும் !