இந்த பூமியில் மனித இனமும் ஏலியன் தான் பால் வெளியில் மனிதரில் உள்ள Nitriles RNA கண்டு பிடிப்பு

இந்த செய்தியை பகிர

ஏலியன்

பூமியில் இருந்து பல மில்லியன் மைல் தொலைவில் உள்ள பால் வெளி நட்சத்திரக் கூட்டங்களில் நைட்ரைல்ஸ்(nitriles) என்னும் மூலக் கூறுகள் அடங்கிய முகில் கூட்டம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். மனித உடலில் செல்கள் தோன்ற காரணமாக இருக்கும் RNA மற்றும் DNA மூலக் கூறுகளை உருவாக்க இந்த நைட்ரைல்ஸ் மூலக்கூறுகள் தேவை.

இவை முன்னர் ஒரு காலத்தில் பூமியில் வந்து விழுந்த விண் கற்களில், இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.  ஆரம்ப காலத்தில், தற்போது பூமி சஞ்சரிக்கும் இடத்தில் பெரும் வெடிப்பு ஒன்று ஏற்பட்டு தூசித் துகள்கள் கற்பாறைகள் தோன்றியது என்றும். அதன் பின்னர் சூரியன் தோன்றியது. அதற்குப் பின்னால் சூரியன் ஈர்ப்பு விசையால் கற்கள் தன்னை தானே சுற்ற ஆரம்பித்து. அதனூடாக ஏற்பட்ட ஈர்ப்பு விசை காரணமாக அருகில் உள்ள கற்பாறைகளை அது ஈர்க்க.  மேலும் மேலும் இறுகி, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் பூமி உருவாகியது.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு , சூரியனையும் சுற்றிவரவே, பூமியில் பருவ மாற்றங்கள்  தொடங்கியது. இன் நிலையில் தான் வேற்றுக் கிரகங்கள் மற்றும், வேறு பால் வெளி நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வந்த பனிப் பாறைகள் பூமி மீது மோதி நீரை(கடலை) உருவாக்க. அதன் பின்னர் வந்து விழுந்த பல விண் கற்களில் உள்ள மிக முக்கியமான படிமங்களே உயிரினம் உருவாக காரணம் ஆகியது, என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தற்போது ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப்ப வளர்ச்சியால், அதி தொலைவில் என்ன இருக்கிறது என்பதனை தெளிவாகப் பார்க்க முடிகிறது. அந்த வகையில், அதி தொலைவில் உள்ள, முகில் கூட்டங்களில், உயிரினம் தோன்ற ஏதுவான, பல வாயுங்கள் இன்னும் காணப்படுகிறது. அவை எந்த கிரகங்களில் எல்லாம் சென்று வீழுகிறதோ. அங்கே உயிரினம் தோன்ற வாய்ப்புகள் உள்ளது. கிரகத்தின் உள்ள வாயுக்களை சுற்றுபு புற சூழலுக்கு அமைவாக, அவை தம்மை மாற்றிக் கொள்ள வல்லதாக உள்ளது. எனவே பூமியில் தோன்றிய உயிரினங்கள் அனைத்துமே வேறு ஒரு இடத்தில் இருந்து வந்த மூலக் கூறுகள் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்த வகையில் பார்த்தால் மனித இனமும் ஒரு ஏலியன் தான்.

நாசா விஞ்ஞானிகள் ஏன் ஆபத்தான விண் கல் பூமியை நோக்கி வந்தால் அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள் என்பது இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும். பூமி அழிந்து விடும் என்று அல்ல. பூமியை நோக்கி வரும் ஒரு கல்லில், மனிதனை விட அதி புத்திசாலியான ஒரு உயிரினம் தோன்றக் கூடிய மூலக் கூறுகள் இருந்தால் ? என்ன ஆகும் ? அந்தக் கல் பூமியில் விழுந்தால் ? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்…


இந்த செய்தியை பகிர