கணவன் மற்றும் காதலனுடன் ஒரே வீட்டில் தங்கிய பிரியங்கா இரவில் நடந்த கிறுங்கடிக்கும் படுகொலை !

கணவன் மற்றும் காதலனுடன் ஒரே வீட்டில் தங்கிய பிரியங்கா இரவில் நடந்த கிறுங்கடிக்கும் படுகொலை !

கணவன் மற்றும் தனது கள்ளக் காதலனுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்த பிரியங்கா இரவோடு இரவாக கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்ய, போதாக்குறைக்கு கள்ளக் காதலன் கத்தியால் குத்தியும் உள்ளார். வீடு முழுக்க பரவி இருந்த ரத்தத்தை தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டு ஓசைபடமால் உல்லாசமாக இருந்துள்ளார்கள் இந்தக் கள்ளக் காதல் ஜோடி. உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் டாக்ஸி ஓட்டுனராக இருந்தார் சிவம்(26) இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி இருந்தார்.

அவர்கள் வீட்டுக்கு அருகே வசித்து வந்த 23 வயது இளைஞரான, யாதவ் என்பவரை பிரியங்கா, தற்செயலாக சந்தித்து பேச ஆரம்பித்தார். இது நாளடைவில் காதலாக மாறி பின்னர் கள்ளக் காதலாக மாறிவிட்டது. சமயம் கிடைக்கும் போது எல்லாம் உல்லாசமாக இருந்துள்ளார்கள் இவர்கள். இந்த விடையத்தை கேள்விப்பட்ட சிவம், மனைவியைக் கண்டிக்க, 2 வயது பிள்ளையை தூக்கிக் கொண்டு அவர், யாதவுடன் சென்று தலைமறைவாகிவிட்டார். பிள்ளைப் பாசத்தில் அலைந்த சிவம், ஒரு வழியாக பிரியங்காவையும் யாதவையும் கண்டு பிடித்து , வீட்டில் வந்து தங்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் நான் வந்தால் யாதவ்வோடு தான் வருவேன். யாதவும் எங்களோடு வீட்டில் தங்கவேண்டும் என்று நிபந்தனை போட்டார் பிரியங்கா. இதற்கு சம்மதித்தார் சிவம். இதனால் இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில். குறித்த வீட்டில் ஒரு படுக்கை அறை தான் இருந்துள்ளது என்பது அதி விஷேஷமான செய்தி. கடந்த 21ம் திகதி இரவு, திடீரென, பிரியங்கா கணவரின் கழுத்தை நெரிக்க, யாதவ் சரமாரியாக சிவத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்கள். அனைத்தையும் அவர்கள் மூடி மறைத்த நிலையில். சிவத்தின் உறவினர்கள் கொடுத்த புகாரில், பொலிசார் விசாரணை நடத்தி கள்ளக் காதல் ஜோடியை கைதுசெய்து வாக்குமூலம் பெற்றுள்ளார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் இப்படியும் நடக்கிறது மக்களே !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *